
விஜயசேதுபதிக்கு ஜோடியாக பீட்சா படத்தில் ரம்யா நம்பீசனும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரியும், சூதுகவ்வும் படத்தில் சஞ்சிதா ஷெட்டி, இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் நந்திதா என பல நடிகைகளுடன் நடித்து விட்டார் விஜயசேதுபதி. ஆனால் அப்போதெல்லாம் அவரை எந்த நடிகையுடனும இணைத்து கிசுகிசுக்கள் பரவவில்லை. ஆனால், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் ஐஸ்வர்யாவுடன் நடித்தபோது கிசுகிசுவில் சிக்கிக்கொண்டார். அதையடுத்து, இப்போது சீனுராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்திலும் ஐஸ்வர்யா இருக்கிறார். ஆனால், மீண்டும் அவருடன் நடித்தால் கிசுகிசுக்கள் இன்னும் எகிறிவிடும் என்று அவரை அதே படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கும் விஷ்ணுவுக்கு ஜோடியாக்கி விட்டனர்.
0 comments