நஸ்ரியாவுக்கு சினிமாவில் நடிப்பதை விட இல்லற வாழ்வில் சிறந்து விளங்கவே விருப்பமாம்!

News Service
குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா நசீம். மலையாளத்தில் இருந்து 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஜெய்யுடன் இவர் நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தப்படியாக எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை. 19 வயதான நஸ்ரியாவுக்கும், மலையாள இயக்குநர் பாசில் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் சொல்ல இருமாதங்களில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக படங்களில் நடிக்க வேண்டி நஸ்ரியாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்படி கிட்டத்தட்ட 6 படங்கள் வரை அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதில் மூன்று தெலுங்கு படங்களும், மூன்று தமிழ் படங்களும் அடங்கும். இந்த படங்கள் அனைத்தும் முன்னணி நடிகர்களின் படங்கள் தான். ஆனால், அவை எல்லாவற்றையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார் நடிகை நஸ்ரியா.
இதுப்பற்றி நஸ்ரியா தரப்பில் விசாரித்ததில், நஸ்ரியா ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். அந்தளவுக்கு மிகவும் பிடிவாதக்காரர். திருமணத்திற்கு முன்பாக சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது, ஷூட்டிங்கை முடித்து கொடுக்க கால அவகாசமும் இருந்தது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவருக்கு சினிமாவில் நடிப்பதை விட இல்லற வாழ்வில் சிறந்து விளங்கவே விருப்பம். ஆகையால் தான் 19 வயதில் திருமணத்திற்கு ஓ.கே. சொல்லிவிட்டார் என்கின்றனர்.
Tags: ,

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.

0 comments

Leave a Reply