நல்ல கதையிருந்தால் சம்பளம் இல்லாமலும் நடிக்க தயார் - சமந்தா

News Service
நல்ல கதையம்சம் உள்ள படங்களில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயார் என்று நடிகை சமந்தா அறிவித்தார். இவர் தற்போது விஜய் ஜோடியாக கத்தி படத்திலும் சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதால் சம்பளத்தை ரூ.1 கோடிக்கு உயர்த்திவிட்டதாக செய்திகள் பரவின. இது நயன்தாரா, அனுஷ்கா போன்றோர் வாங்கும் சம்பளத்துக்கு இணையானது ஆகும். அத்துடன் சிறு பட்ஜெட் படங்கள், புதுமுக நடிகர்கள் படங்களில் நடிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சமந்தா பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரவி உள்ளன. எனக்கு பணம் முக்கியம் இல்லை. நல்ல கேரக்டர்கள்தான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் சம்பளத்தை குறைக்க தயாராக இருக்கிறேன். எனக்கு ரொம்ப ஷாக் கொடுக்கும் கதையாக இருந்தால் அந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயார். சிறு பட்ஜெட் படங்களாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. நல்ல கதை என்று எனக்கு தோன்றினால் அந்த படத்தில் நடிப்பதற்கு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அந்த படத்தின் பட்ஜெட்டுக்கு தகுந்தாற் போல் சம்பளம் வாங்கிக் கொள்வேன். என்று சமந்தா கூறினார்.
Tags: ,

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.

0 comments

Leave a Reply