
நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்தது மட்டுமல்ல, வாக்களித்த கையோடும், மையோடும் ஃபோட்டோ எடுத்து ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் பண்ணி அநியாயத்துக்கு சீன் போட்டனர். சிரிப்பு நடிகர் வடிவேலுவோ வழக்கமாக தேர்தல் அன்று காலையிலேயே உற்சாகமாக வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை நேரத்திலேயே வந்து வாக்களித்துவிடுவார். கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததினால், வாக்களித்துவிட்டு, மீடியாக்களின் கேமரா முன்பு நின்று ஏகத்துக்கும் சவுண்ட்விட்டார்.
0 comments